கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி முழுமையாக குணமடைந்து வெளியேறினார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 52 வயதான சுற்றுலா வழிகாட்டி முழுமையாக குணமடைந்து வெளியேற்றப்பட்டார் என அறிய முடிகின்றது.

இவர் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள  ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 வயதான குறித்த சுற்றுலா வழிகாட்டி இத்தாலிய சுற்றுப்பயணக் குழுவுக்கு சேவைகளை வழங்கிய பின்னர் நாடு திரும்பிய நிலையில் இந்த மாத தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments