நல்லூர் மற்றும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயங்களின் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் மற்றும் தொலைபேசி மூலமாக போலியான செய்திகள் பரப்பட்டுவந்தன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில்  வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும்  இடம்பெறவில்லை என எமது செய்தியாளர்களும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் கலசம் உடைந்து வீழ்ந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும் நல்லூர் நிர்வாகம் அறிவித்துள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments