முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - பா.டெனிஸ்வரன்

(CBC TAMIL / JAFFNA) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்  என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்து நேற்று பா.டெனிஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சி சபை என்பவற்றிற்கு, புணர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சந்தப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டத்திலும் உரிய சிறந்த போராளிகளை தெரிவு செய்து,  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

No comments: