மனித புதைகுழி விவகாரம் - காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என அறிவிப்பு

(CBC TAMIL / MANNAR) மன்னார் – சதொச வளாக மனித புதைகுழி வழக்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று நேற்று கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மற்றும் அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற கற்பனை கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

No comments: