கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுக்கும் அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைவரம் தொடர்பாக ஆராயும் கூட்டம் மாவட்டச் செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் ஊரடங்குச் சட்டம் உள்ளபோதும் மக்களுக்கு எவ்வாறு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், ஊரடங்குச் சட்டம் தளர்த்திய பின்னர் மக்கள் திடீரென வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு திரளும் நிலையில் அதனைத் தவிர்ப்பதற்கு வீடுகளுக்குச் சென்று பொருட்களை வழங்குவது தொடர்பாகவும் வறுமைக் கோட்டில் உள்ள மக்களை இனங்கண்டு அவர்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், “ஊரடங்கு சட்டம் உள்ளபோதும் மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கிராமங்களிலுள்ள சில கடைகள் மூலம் குறிப்பிட்ட நேரங்கள் மட்டும் உணவுப் பொருட்களை வழங்கக் கூடியவாறு அறிவித்திருக்கிறோம்.

இவை அனைத்தையும் பிரதேச செயலகங்களின் கண்காணிப்பில் கிராமங்களிலுள்ள சில கடைகள் மூலம் குறிப்பிட்ட நேரங்கள் மட்டும் உணவுப் பொருட்களை வழங்கக் கூடியவாறு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments