கொரோனாவினால் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸினால் இன்று மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றுவரையான உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 255ஆக உள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 03 ஆவது நபரும் இன்று முழுமையாக குணமடைந்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments