கொரோனா வைரஸ் - 7 பேர் பாதிப்பு: சற்றுமுன்னர் அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலியில் இருந்து திரும்பிய 44 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பொதுக் கூட்டங்களும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

No comments: