7 நாட்களாக தேடப்பட்டுவந்த ரவி மற்றும் அர்ஜுன் ஆலோசியஸ் நீதிமன்றில்

(CBC TAMIL - COLOMBO) - 7 நாட்களாக தேடப்பட்டுவந்த முன்னால் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜீன் அலோசியஸ சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 பேருக்கு இன்று பிற்பகல் நான்கு மணிக்கு முன்னர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பேர்பச்சுவல் ஸ்டசரிஸ் கம்பனியின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், எஸ்.பத்மநாபன் மற்றும் இந்திக்க சமன்குமார ஆகியேரே இம்மூவர் ஆவர். இவரது வருகையை அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது

ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய் கிழமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments: