சென்னையில் இருந்து நாடுதிரும்பிய இருவருக்கு கொரோனா - அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு வலியுறுத்து

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு இலக்காகிய மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 110 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று மட்டும் புதிதாக 04 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்கியுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் சென்னையில் இருந்து திரும்பியவர்கள் என்றும் எனவே கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments