பிரித்தானியாவில் 1019 பேரை காவுவாக்கிங்கியது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸுக்கான சோதனைகளின் பின்னர் இங்கிலாந்தில் மேலும் 260 பேர் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டள்ளது.

ஒரே நாளில் ஏற்பட்ட இந்த அதிகரிப்புடன் பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்துள்ளது. இந்த மரணங்களில் பெரும்பாலானவை இங்கிலாந்தில் ஏற்பட்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 33 முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள் என NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அவர்களில் 13 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் ஏனைய அடிப்படை மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டள்ளது.

இவற்றில் அதிக எண்ணிக்கையிலான 16 பேரின் இறப்புகள் லூசியம் மற்றும் கிரீன்விச் பகுதிகளின் NHS அறக்கட்டளையில் நிகழ்ந்துள்ளதாகவும், மேலும் 15 பேர் எப்சம் மற்றும் செயின்ட் ஹெலியர் பல்கலைக்கழக மருத்துவமனைகளின் அறக்கட்டளையில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஸ்கொட்லாந்தில் இருந்து மேலும் ஏழு இறப்புக்கள் ஏற்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது என்று ம் வேல்ஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு அதிகரித்து எண்ணிக்கை 38 ஐ எட்டியுள்ளது என்றும் வடக்கு அயர்லாந்தில் மேலும் இரண்டு பேர் இறந்து அங்கு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments