மேலும் இருவருக்கு கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 09 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதுவரை உலகளாவிய ரீதியில்  663,740 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். 142,183 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments