ஒன்ராறியோவில் மேலும் 85 பேருக்கு கொரோனா வைரஸ் - 588 ஆக அதிகரிப்பு

ஒன்ராறியோவில் மாகாணத்தில் 85 புதிய கோவிட் -19  நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது மாகாண எண்ணிக்கையை 588 ஆகக் கொண்டு வந்தது என்றும் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் டர்ஹாம் பிராந்தியத்தில் 90 வயதுடைய ஒரு பெண்ணும், ஹாமில்டனில் 80 வயதான ஒரு பெண்ணும் டர்ஹாம் பிராந்தியத்தில் ஒருவரும் என 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஒன்ராறியோவில் இதுவரை இடம்பெற்ற உயிரிழப்பில் இது மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) நிலவரப்படி, புதிய கொரோனா வைரஸின் தக்கத்துக்குள்ளான 35 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் ஹாமில்டனில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10,074 பேர் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த 32,547 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments