நள்ளிரவு 12 மணி முதல் சுவிஸில் அவசரநிலைச் சட்டம் அமுல்..!!

சுவிஸில்  இன்று இரவு 12.00மணி முதல் அவசரநிலைச் சட்டம் அமுலாக்கப்படுகின்றது.


(சிபிசி தமிழ்-cbc tamil ) மருத்துவ மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர மற்றவை பூட்டப் படுகின்றன. பலசரக்கு கடைகளில் ஒரே நேரத்தில் பலர்  நுழைவதையும் தடை செய்கின்றனர். மக்கள் தேவையின்றி வெளியே நடைமாடுவது தடுக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள்  மாலை18.00மணிவரை மட்டுமே திறந்திருக்கலாம்.பொதுப் போக்குவரத்து வசதியும் மட்டுப் படுத்தப்படவுள்ளது.

 இச்சட்டத்தினால் அரசாங்க அலுவலர்கள், நிறுவனங்களில் வேலைசெய்பவர்கள் மற்றும்  மாணவர்கள் 19. Aprilவரை  அதிகளவில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டிவரும்.  வங்கிகள், அஞ்சலகம் மற்றும் மக்கள் தொடர்பு நிலையங்கள் இயங்கும்.

இது அதிவேகமாகப் பரவிவரும் தொற்றலைத் தடுக்கவும், மற்றைய நோயாளருக்குரிய பராமரிப்பை வழக்கம் போல் கவனிக்கவும், மருத்துவச் சேவையின் தரம் குறையாமலிருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே.
பொருளாதாரப் பாதிப்பினை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கென மானியத் தொகையும் அரசினால் குறிப்பிட்டளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்த்தல் மற்றும் கூட்டமாக சேருதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டிலிருப்பவர்கள் தங்களின் நேரத்தை செயற்திறனுடன் கழிக்க வேண்டும்.
இணையத்திலும் தொலைபேசியிலும் போக்காமல், பல நாட்களாக முடிக்க முடியாமல் தங்கியிருக்கும் வேலைகள், ஆக்கபூர்வமான கலை ஆக்கங்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறையான பயிற்சிகள் போன்ற விடயங்களில் செலவிடலாம்.

உண்டும் உறங்கியும் பொழுதைக் கழிக்காமல் உற்சாகமாக இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை இலகுவில் பெறலாம் என்பது நிச்சயம்.

No comments: