அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி – இராணுவ தளபதி அறிவிப்பு

அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே ஊரடங்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட மாட்டாது என கூறினார்.

இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராணுவத் தளபதி, திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்போது பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போது பயணம் செய்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என குறிப்பிட்ட இராணுவத் தளபதி, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை நாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் தொடர்பான சமூக ஊடகங்களில் பரப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

சில குறைபாடுகள் இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருப்பவர்களுக்கு இராணுவத்தினால் முடிந்த அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: