கொரோனவினால் ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(CBC TAMIL/WORLD NEWS) - ஜப்பானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (15) 1,484 ஆக அதிகரித்துள்ளது என்றும் இது முந்தைய நாளை விட மிகவும் அதிகம் எனவும் அந்நாட்டு அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 697 பேர் டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலும் 14 பேர் சீனாவில் இருந்து விசேட விமானம் ஒன்றில் வந்தவர்களும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நாட்டில் உயிரிழப்புக்கள் முந்தைய நாளிலிருந்து 29 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 7 பேர் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: