உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா? சாதாரண பரீட்சை பெறுபேறு எப்போது? - கல்வி அமைச்சு

2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: