அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்றது ஐ.தே.க.!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (30) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டில் நேரத்தை செலவிடுவதால் மின்சார கட்டணங்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பையும் பலப்படுத்த வேண்டும் அல்லது அது வீழ்ச்சியடையும் விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எனவே தேவையற்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ரூபாயை வலுப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ ஒரு திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments: