Tuesday, March 31, 2020

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதன் காரணமாகா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 4 வெளிநாட்டினர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 173 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 122 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோய்த்தொற்றாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் அவர்கள் இருவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.