கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த வைத்தியசாலையின் குறித்த வாட்டில் கடமையாற்றிய பணிக்குழுவினரும் ஏனைய நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வார்டில் கடமையாற்றிய வைத்தியர் உள்ளிட்ட பணிக்குழுவினர் மஹரகம ஆயிரியர் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அதேபோல் அங்கிருந்த நோயர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
0 Comments