கொரோனா வைரஸ் யாழில் எவரும் அடையாளம் காணப்படவில்லை - சுகாதார மேம்பாட்டு பணியகம்

கொரோனா வைரஸினால் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் 222 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 77 பேரில், தமிமை படுத்தப்பட்ட மையத்தில் 31 பேர், கொழும்பில் 16 பேர், ஹம்பகாவில் 10 பேர், புத்தளத்தில் 06 பேர் களுத்துறை 04 பேர், இரத்தினபுரி 03, குருநாகல், காலி, கேகாலை,பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: