கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீன பெண் உட்பட நால்வர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் சீன பெண் உட்பட நான்கு பேர் குணமடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பூரணமடைந்ததும் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் நான்கு போரையும் வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இரண்டு நோயாளர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: