விடுமுறை நீடிப்பு குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர்

தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்று நாள் விடுமுறை காலத்தை நீடிப்பது தொடர்பான இறுதி முடிவு ஜனாதிபதியால் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இன்று (18) கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் விவாதிக்கப்பட்டது என கூறினார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தல் அரச விடுமுறையை நீடிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மூன்று நாள் அரச விடுமுறை (அத்தியாவசிய சேவை தவிர்ந்த) காலத்தை அரசாங்கம் நேற்றுமுன்தினம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: