பெரிய வெங்காயம், பருப்பு மற்றும் ரின் மீன் விலையில் திருத்தம்

பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 1 கிலோ மைசூர் பருப்பின் விலை ரூ .65 ஆகவும், 1 கிலோ பெ.வெங்காயத்தின் விலை ரூ .150 ஆகவும், 425 கிராம் மீன் டின் விலை ரூ .100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்தவொரு இறக்குமதியாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர்கள், கொடுக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேலே விற்பனை செய்ய கூடாது என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments: