மனைவிக்கு கொரோனா - மனைவியை விட்டு தனிமையாகிய கனடா பிரதமர்

(CBC TAMIL - CANADA) - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோன வைரஸ் பாதித்துள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக பிரதமர் அறிவித்துள்ளார்

பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரேனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். இருப்பினும் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிiiயை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார், அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments