கொரோனா வைரஸ் எதிரொலி - பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

(CBC TAMIL - COLOMBO) - கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் நாளை (சனிக்கிழமை) முதல்  2 வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக இன்று முதல் பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. அந்தவகையில், இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை, அரச பாடசாலைகளின் விடுமுறைக்கமைய மேல் மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தனியார், மாகாண சபைக்கு உட்பட்ட, சர்வதேச மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments: