தென் கொரியாவில் கொரோனாவினால் மேலும் 74 பேர் பாதிப்பு

தென் கொரியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதடாகவும் இது நேற்றைய தினத்தைவிட குறைவான எண்ணிக்கை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இதுவைய கொரோனா வைரஸினால் 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை சமூக்களமாக குறைவடைந்து வருவதாகவும் குறிப்பாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் பெப்ரவரி 29 ஆம் திகதி 909 என்ற எண்ணிக்கையே அதிகமாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையாக குணமடைந்த மேலும் 303 நோயாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக இதுவரை 1,137 பேர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் என்றும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அறிவித்துள்ளன.

No comments: