கொரோனா வைரஸ்: மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை

கொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்றும் அவர் கூறினார்.

No comments: