அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 2,000 தாண்டியது - நியூயோர்க் முடக்கப்படாது - டிரம்ப்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் பகுதிக்கு பயண எச்சரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (29) தெரிவித்திருந்தபோதும் குறித்த பகுதியை மூடுமாறு விடுக்கப்பட்ட யோசனைகளை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து நேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "ஒரு தனிமைப்படுத்தல் தேவையில்லை" என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அத்தோடு 122,000 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையயில் நேற்று, நியூயோர்க்கிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கும், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட்டின் சில பகுதிகளுக்கும் தடை விதிக்கக்கூடும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

இருப்பினும் கிழக்கு அமெரிக்காவின் பொருளாதார இயந்திரமாக செயல்படும் ஒரு பிராந்தியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து விமர்சகர்கள் உடனடியாக இந்த யோசனையை நிராகரித்திருந்தனர்.

No comments: