யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று இல்லை...!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்தில் 36 பேர் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: