கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டாம்

கொரோனா வைரஸ் பரவலை குளோரோகுயின் “Chloroquine” என்ற மருந்தால் மாத்திரம் தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே உரிய மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி குளோரோகுயின் “Chloroquine”மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பின்படி, இந்த உத்தரவை / ஆலோசனையை மீறும் எந்தவொரு நபரும் குற்றவாளியே, மேலும் 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க என்.எம்.ஆர்.ஏ. சட்டத்தின் பிரிவு 131 இன் கீழ் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

இருப்பினும் வைத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 5 இலட்சம் குளோரோகுயின் மாத்திரைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments