கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு...!

நாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று (01) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 124 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் (32பேர்) பதிவாகியுள்ளனர்.

அதேபோன்று, புத்தளத்தில் 25 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் கம்பஹா மாவட்டத்தில் 11 பேர் யாழில் 04 பேர் கண்டி மாவட்டத்தில் 4 பேர் இரத்தினபுரியில் 3 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 21 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா நோயாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மருத்துவ கண்காணிப்பின் கீழ் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: