2000 பேருடன் கொழும்பு 10 முழுமையாக முடக்கப்பட்டது

மருதானையில் (கொழும்பு 10) அர்னால்ட் ரத்நாயக்க மாவத்தையில் வசிக்கும் 2000 பேர் தங்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டனர் என கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்.

நேற்று (01) மூன்றாவது மரணமாக பதிவாகிய நபர் வசித்த கொழும்பு 10, மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வீடுகள் அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இறந்தவரின் மகள், மருமகள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோர் அங்கொடை ஐ.டி.எச். வைத்த்ஹியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.

No comments: