உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.

க.பொ.த. உயர்ந்தார் பரீட்சை இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது, அதே சமயம் புலமைப்பரிசில் பரிட்சையும் அதே மாதத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 338,000 விண்ணப்பங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.

எனவே திட்டமிட்டபடி குறித்த பரிட்சைகளை நடத்த அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

No comments: