பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் மேலும் 06 பேர் குணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை 523 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 390 பேர் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 295 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: