கொரோனா வைரஸ் தாக்கம் - 225 பேரிடம் பரிசோதனை!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தில் 225 பேரிடம் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டவர்கள் மாதிரிகள் மற்றும் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பல நபர்களின் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன என சுகாதார கணிப்பாளர் நாயகம் டொக்டர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று (03) தெரிவித்துள்ளார்.

அதன்படி அதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் மொத்த எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் COVID-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 4 ஆக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: