கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 233 பேர் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 233 பேர் இன்று (05) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இதன்படி நாட்டின் சில மாகாணங்களில் உள்ள படைமுகாம்களில் குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைந்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் இந்த தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைந்துள்ளன. இதிலும் யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம் மற்றும் பலாலி படைமுகாங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 233 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் அவர்களை சமூக இடைவெளியினை பேணுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments