கொரோனா வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 271 ஆக உயர்வு!

இலங்கையில் நேற்று (19) இரவு மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் இலங்கையில் இதுவரை 271 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் தனிமைப்படுத்தப்படாதவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மற்றையவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவராவார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 166 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, 122 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: