மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் இன்று மட்டும் (19) 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொரோனா நோயாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி இருந்தமை காரணமாக கொழும்பு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 158 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 91 பேர் பூரணமாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: