கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 4 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 154 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: