500,000 கிலோ காய்கறிகளை வாங்குகிறது அரசு!

பொருளாதார மையங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும்  திட்டத்தின் கீழ் அரசாங்கம் 500,000 கிலோ கிராம் காய்கறிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 300,000 கிலோகிராம் காய்கறிகளை நேற்று வாங்கியதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை தம்புள்ளையில் இருந்தும் 200,000 கிலோகிராம் காய்கறிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நாட்டில் தற்போது காய்கறி தட்டுப்பாடு இல்லை என்றும் அறிவித்துள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை பெற்றுக்கொள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: