அடையாள அட்டையின் பிரகாரம் ஊரடங்கு அனுமதி...! ஊரடங்கு உத்தரவு மே மாதம் 4 திகதிவரை நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, 1 அல்லது 2 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 3 அல்லது 4 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் செவ்வாய்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 5 அல்லது 6 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் புதன்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 7 அல்லது 8 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 9 அல்லது 0 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments