95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் - நோயாளிகளின் எண்ணிக்கை 477 ஆனது

மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று (26) மட்டும் 25 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 02 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: