மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - 180 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

180 பேரில் தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 257 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: