இலங்கையில் 6 ஆவது உயிரிழப்பு சற்றுமுன்னர் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொடர்பான முதல் மரணம் மார்ச் 28 ஆம் திகதி ஐ.டி.எச். வைத்தியசாலையிலும், இரண்டாவது மரணம் மார்ச் 30 ஆம் திகதி  நீர்கொழும்பிலும் மூன்றாவது மற்றும் நான்காவது மரணம் முறையே ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் 5 வது மரணம் ஏப்ரல் 4 ஆம் திகதி வெலிகந்த வைத்தியசாலையிலும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் No comments: