இன்றுமட்டும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - 303 ஆக உயர்வு

மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மட்டும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: