உலக நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா - 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கம் உருவான சீனாவின் வுஹான் நகரையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளை குறித்த வைரஸ் ஆட்டம் காணவைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 1 இலட்சத்து 97 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 616 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 28 இலட்சத்து 28 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 6 ஆயிரத்து 174 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1 இலட்சத்து 97 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 7 இலட்சத்து 98 ஆயிரத்து 371 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 951 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 52 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று மட்டும் அங்கு புதிய நோயாளர்கள் 38 ஆயிரத்து 764 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 9 இலட்சத்து 25 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 324 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 3 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று 32 ஆயிரத்து 38 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்தமாக 12 இலட்சத்து 25 ஆயிரத்து 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 93 ஆயிரத்து 199 பேர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 420 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 25 ஆயிரத்து 969 ஆகப் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 3 ஆயிரத்து 21 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 994 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 367 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 22 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளன. அத்துடன், புதிய நோயாளர்கள் 6 ஆயிரத்து 740 ஆக உள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 92 ஆயிரத்து 355 பேர்வரை குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, பிரான்ஸில் நேற்று 389 மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் மொத்தமாக 22 ஆயிரத்து 245 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 828 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 768 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று மட்டும் 5 ஆயிரத்து 386 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 999 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 800 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 185 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளன.

இதேவேளை நெதர்லாந்தில் நேற்று மட்டும் 112 பேர் மரணித்துள்ளதுடன் சுவீடனில் அதிகபட்சமாக 131 பேரும் சுவிஸில் நேற்று 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 155 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளன.

ஆசியாவில் நேற்று 391 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 109 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 93 பேரும் இந்தோனேஷியாவில் 42 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஆசியாவில் இதுவரை 4 இலட்சத்து 48 ஆயிரத்து 216 பேர் கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 ஆயிரத்து 603 பேர் மரணித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் 2 இலட்சத்து 12 ஆயிரத்து 642 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: