நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது - அறிவிப்பு இதோ

அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 முதல் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை தற்போதைய நிலைமை தொடர்பாக அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர் என்றும் இன்று அல்லது நாளை ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு எமது முகநூலுடன் இணைந்திருங்கள்

No comments: