மீண்டது யாழ்ப்பாணம் - தாவடிக் கிராமம் இன்று விடுவிக்கப்பட்டது...!

வடக்கு மாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் இன்று (13) காலை விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டு இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் மற்றும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.

தாவடி கிராமத்துடன் சேர்த்து இன்றைய தினம் 332 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படவுள்ளனர். 

No comments: