தேசிய அவசரகால சட்டத்தை நீட்டித்தது எல்சல்வடோர் காங்கிரஸ்!

மத்திய அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு எல்சல்வடோர் காங்கிரஸ் நேற்று (12) தேசிய அவசரகால சட்டத்தை நீடித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி நயீப் புக்கேலின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முற்படுவதாகவும் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாகவும் எல்சல்வடோர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர் புக்கலே மற்றும் பிற மத்திய அமெரிக்க தலைவர்கள் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர், ஆயினும் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புக்கேல் வார இறுதியில் கூறினார். சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள், அதே நேரத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று புக்கேல் கூறினார்.

இந்நிலையில் கடந்த வாரம், உச்சநீதிமன்றம் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்க தவறியவர்களை கைது செய்வதைத் தவிர்க்குமாறு புக்கலின் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது, மேலும் வாகனங்கள் அல்லது கைதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் தடை விதித்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, எல் சல்வடோரில், சுமார் 6.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 125 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் கண்பட்டுள்ளதுடன் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: