மரக்கறிகளுடன் வந்த வாகனம்...! ரஞ்சன் ராமநாயக்க இல்லத்தில் நள்ளிரவில் நடந்த நாடகம்....!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் கூடிய லொறியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் நேற்று முன்தினம் இரவு மாதிவெலவிலுள்ள அவரது இல்லத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

"லொறியை உள்ளே அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவே தான் நாடாளுமன்றத்தின் செயலாளரை தொடர்பு கொண்டதாவும் இதன்போது தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இவை கொண்டு வரப்பட்டன என்று விளக்கியதாகவும்" ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

மேலும் அதில் சிலவற்றினை ஏழை மக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், தனது வாக்காளர்களிடமிருந்து பல அத்தியாவசி பொருட்களை கேட்டு பல அழைப்புகள் வந்தன என்றும் இதனால் தான் தம்புல்லவிலிருந்து ஒரு பொருட்களை கொள்வனவு செய்ததாகவும் கூறினார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக செயலாளர் நாயகத்திற்கு விளக்கும்போது லொறி உள்ளே அனுமதிக்கப்பட்டது என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க, "தம்புள்ளையில் இருந்து கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை வீட்டுக்குள் கொண்டுவர ரஞ்சன் ராமநாயக்க பல முயற்சிகளை செய்திருந்தார்.

நாங்கள் லொறியையும் சாரதியையும் சோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இவை நடந்ததால் அது சாத்தியமில்லாமல் போனது. இருப்பினும், அந்த நேரத்தில் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு லொறியை உள்ளே அனுமதிக்க வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.

No comments: